கி.பி.13ம் நூற்றாண்டு நெடுங்கிள்ளி என்ற சோழ சிற்றரசால் கட்டப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், பெரும்புத்துர் என்ற ஊரும் அதே மாவட்டம் கீழமத்தூர் என்ற ஊரும் மேலும் அரியலூர் மாவட்டம் வேள்விமங்கலம், கடலூர் மாவட்டம் தொளார், கொடிகலம், கோனூர், திருமங்கலம்-ஆகிய 7 திருக்கோவில்களில் அமைந்துள்ள அம்மன்களும் சகோதரிகள் ஆவர்கள்.
5 அடி உயர சிலை வடிவம் கொண்ட இந்த ஆலயம் 100 அடி நீளம் 30 அடி அகலம் கொண்ட கருவறை. அப்தமண்டபம், தவனமண்டபம், மகாமண்டபம் ஆகிய அமைப்பில் உள்ளது.
தளவிருச்சமாக வேம்பு உள்ளது. உற்சவர் விக்ரகம் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆணி, ஆடி பிரமோற்சவம் , பௌர்ணமி பூஜை, தை மாத பூஜை, தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு, ஆடி பூரம், நவராத்திரி, மற்றும் முக்கிய சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
சுற்றுப்புற கிராமங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மனாகவும், பலரது குல தெய்வமாகவும், சக்தி வாய்ந்த அம்மனாகவும் இந்த செல்லியம்மன் திகழ்கிறாள்.
No comments:
Post a Comment